‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் 3,768 முகாம்கள், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்படுகிறது. அரசு துறைகளின் சேவைகளை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி ஜூலை 7ஆம் தேதி தொடங்கவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர்உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் பணி தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில்,’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.