இஸ்ரேல் பிரதமர் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்  

சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 19) நடத்தப்பட்டது.
தாக்குதலின் போது பிரதமரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை என்றும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
லெபனானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் ஒரு கட்டிடத்தில் மோதியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த இரண்டு ஆளில்லா விமானங்கள் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. நெதன்யாகுவின் இல்லத்தின் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஹெஸ்புல்லாவோ அல்லது வேறு எந்த போராளிக் குழுவோ உரிமை கோரவில்லை.
எனினும், ஹீப்ரு மொழி மூலங்களை மேற்கோள் ஹிஸ்புல்லா இதில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author