ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்கத் தயார்! ஈரான் விதித்துள்ள அதிரடி நிபந்தனைகள் இவைதான்  

Estimated read time 0 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போரின் காரணமாக மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் காரிபாபாடி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ:
1. ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்.
2. மேற்கத்திய நாடுகளால் முடக்கப்பட்ட ஈரானின் 15 பில்லியன் டாலர் நிதியைத் திருப்பி அளிக்க வேண்டும்.
3. பல ஆண்டுகளாக ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை ரத்து செய்ய வேண்டும்.

You May Also Like

More From Author