தற்போது, உலகத்தில் AI தொழில் துறை உயர்வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் புதிய சுற்று புரட்சி மற்றும் தொழில் துறை சீர்திருத்தத்துக்கு வழிக்காட்டும் நெடுநோக்கு தொழில் நுட்பமாக, செயற்கை நுண்ணறிவு திகழ்கிறது.
இதுவும், அடிப்படை அறிவியலும் ஒன்றுக்கொன்று, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
2010ஆம் ஆண்டு டூரிங் விருது பெற்ற லெஸ்லி கேப்ரியல் வேலியண்ட், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், கணிதவியல், கணினி அறிவியல், அடிப்படை அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சியை சீனா பெரிதும் முன்னேற்றி வருகிறது.
இது பாராட்டத்தக்கது. சீனா மிகவும் சிறப்பு சாதனைகளைப் பெறுவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தின் மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகளவிலான ஒத்துழைப்புகளின் மூலம், செயற்கை நுண்ணறிவின் உள்ளார்ந்த ஆற்றல் வெளிக்கொணரப்பட்டு, மக்களுக்கு மேலும் பெரும் நன்மை புரியும் என்று அறிவியல் துறையினர்கள் தெரிவித்தனர்.