ஜூலை 4, 5ல் TET தேர்வு

Estimated read time 1 min read

டெட் தேர்வுக்கு பிப்ரவரி 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.

அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி டெட் முதல் தாள், 5-ம் தேதி டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு வரும் 18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 10-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்களுக்கு www.trb.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

You May Also Like

More From Author