ஷிச்சின்பிங்-வியட்நாம் தலைமை அமைச்சர் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், 13ம் நாள் வியட்நாம் தலைமையமைச்சர் பாம் மிங் சிங்குடன் சந்திப்பு நடத்தினார்.


அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-வியட்நாம் உறவின் அகலமும் ஆழமும், சாதாரணம் அல்ல. பொதுச் செயலாளர் நுயன் புத்ருங்குடன், சீன-வியட்நாம் உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்பதை அறிவித்தோம்.

அது, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களைக் கொண்டு வருவதோடு, பிராந்தியம் மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
பாம் மிங் சிங் கூறுகையில்,

வியட்நாம், ஒரே சீனா கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வருகிறது. ஷிச்சின்பிங் உலகிற்கு வழங்கிய முன்மொழிவுகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். வியட்நாம் அரசு, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளின் நடைமுறையாக்கத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author