2021ஆம் ஆண்டின் செப்டம்பரில் ஷாஆன்சி மாகாணத்தின் யூலின் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷி ச்சின்பிங், மக்களின் பக்கத்தில் நிலையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்ற வாசகத்தை கண்டார். தனது தந்தை ஷி சோங்சுன் பேசிய உள்ளூர் வட்டார மொழியை நினைவுகூர்ந்த ஷி ச்சின்பிங் ஆழ்ந்த உணர்ச்சி பெருக்குடன் நிறைந்தார்.
ஷி ச்சின்பிங்கிடம் ஷி சோங்சுன் கூறுகையில், எத்தகைய உயர்வான பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவைப் புரிவதை மறக்கக் கூடாது என்றார். தந்தையின் ஆழ்ந்த அன்பும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரின் அசைக்க முடியாத நிரந்தர அர்ப்பணிப்பும் இதுவாகும்.
