தற்போது, 1509 பெரிய மாதிரிகளைச் சீனா வெளியிட்டுள்ளது. உலகில் வெளியிடப்பட்ட 3755 பெரிய மாதிரிகளில் சீனாவின் எண்ணிக்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியில் சீனா புதிய சாதனைகளைப் பெறக் கூடுமென 2025ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தெரிய வந்துள்ளது.
தரவுகளின்படி, தற்போது, உலகளவில் செயற்கை நுண்ணறிவு நிறுவனிங்களின் எண்ணிக்கை 35ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அவற்றில் சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் எண்ணிக்கை 5100யை எட்டி உலகளவில் 15விழுக்காட்டு வகிக்கிறது. சீனாவின் செயற்கை நுண்ணறிவுத் துறை மேலும் செழித்து வளர்வதோடு, புதிய தொழில்நுட்பம், புதிய பயன்பாடுகள் மற்றும் புதிய தொழில் மாரிதிகளும் இடைவிடாமல் தோன்றியுள்ளன. சமூக மற்றும் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றலாக அது மாறியுள்ளது என்று சீனத் தகவல் மற்றும் செய்தித் தொடர்பு தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் யியூசியௌஹூவேய் தெரிவித்தார்.