இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனில் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக டெஸ்ட் தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். அப்படிப்பட்ட அவர் குறைந்தது இன்னும் ஒரு வருடம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அஸ்வினை இந்திய அணி புறக்கணித்து வந்தது. அதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கருதினர். தற்போது அதை ரவிச்சந்திரன் அஸ்வின் உறுதி செய்துள்ளார். அதாவது வெளிநாடுகளில் தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் தனது 100வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற விரும்பியதாக அஸ்வின் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஓய்வு:
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் பெற்றதற்கான பின்னணி காரணங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் 100வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற விரும்பினேன். அதன் பின் சரி சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் விளையாடலாம் என்று நினைத்தேன். ஏனெனில் நீங்கள் நன்றாக ரன்கள் அடித்து விக்கெட்டுகளை எடுக்கிறீர்கள்”
“அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நான் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அந்தப் போட்டியில் நான் சதத்தை அடித்து 6 விக்கெட்டுகள் எடுத்தேன். இருப்பினும் நீங்கள் நன்றாக செயல்படும் போது ஓய்வு பெறும் முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். அதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய போது தோல்வி கிடைத்தது”
அஸ்வின் விளக்கம்:
“அப்போது சரி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடுவோம் என்று முடிவு எடுத்தேன். ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது எனக்கு அது மிகமிக நல்ல தொடராக அமைந்தது. ஆனால் அங்கு முதல் போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததால் சரி மீண்டும் நம்முடைய வட்டம் சுழலத் துவங்கியுள்ளது என்று நினைத்தேன்”
இதையும் படிங்க: அப்றம் எதுக்கு 10.75 கோடிக்கு வாங்குனீங்க.. அவரை கழற்றி விட்டு நடராஜனுக்கு சான்ஸ் கொடுங்க.. ஆகாஷ் சோப்ரா
“ஏற்கனவே உணர்வுப்பூர்வமாக ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கும் உங்களிடம் அது போன்ற முடிவை எடுப்பவர்கள் கூடுதல் மதிப்பை சேர்க்கிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில் உணர்வுகள் உங்களுடையது. அது பற்றி மற்றவர்களுக்கு கவலையில்லை. எனவே ஆஸ்திரேலியாவில் சிந்தித்து இது தான் ஓய்வு பெறுவதற்கான நேரமாக இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன்” என மைக் ஹசி யூடியூப் சேனலில் பேசினார்.
The post இந்தியாவில் 100வது டெஸ்டிலேயே ரிட்டையராக நினச்சேன்.. ஆஸியில் ஓய்வு பெற்றது ஏன்? வேதனையை பகிர்ந்த அஸ்வின் appeared first on Cric Tamil.