தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகர்!

தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் .

தேமுதிகவின் அவை தலைவராக இளங்கோவன் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேமுதிக தலைமை நிலைய செயலாளராகப் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author