2 விக்கெட்ஸ் 38 ரன்ஸ்.. விப்ராஜ் ஸ்பெஷல் சாதனை போராட்டம் வீண்.. டெல்லியை மடக்கிய கொல்கத்தா வெற்றி

Estimated read time 1 min read

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 48வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் போராடி 204/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஹமனுல்லா குர்பாஸ் 26, சுனில் நரைன் 27, கேப்டன் ரகானே 26, ரகுவன்சி 44, ரிங்கு சிங் 36 ரன்கள் அடித்தனர்.

டெல்லி அணிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2, கேப்டன் அக்சர் படேல் 2, மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய டெல்லிக்கு அபிஷேக் போரல் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த கருண் நாயர் தடுமாறி 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் டு பிளேஸிஸ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

மடக்கிய கொல்கத்தா:

ஆனால் எதிர்ப்புறம் கேஎல் ராகுல் 7 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் அடுத்ததாக கேப்டன் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 43 (23) ரன்கள் எடுத்து போராடிய போது அவுட்டாக்கிய சுனில் நரைன் அடுத்ததாக வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸை 1 ரன்னில் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் மறுபுறம் போராடிய டு பிளேஸிஸை 62 (45) ரன்னில் காலி செய்து போட்டியை தலைகீழாக மாற்றினார்.

இறுதியில் இளம் வீரர் விப்ராஜ் நிகாம் அதிரடியாக விளையாடி 38 (19) ரன்கள் குவித்து வெற்றிக்குப் போராடினார். ஆனாலும் அசுட்டோஸ் சர்மா 7 உள்ளிட்ட மற்ற வீரர்கள் கைகொடுக்கத் தவறியதால் 20 ஓவரில் டெல்லி 190/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது.

ஸ்பெஷல் சாதனை:

மேலும் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். மறுபுறம் 10 போட்டிகளில் 4வது தோல்வியை சந்தித்த டெல்லி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 100வது டெஸ்டிலேயே ரிட்டையராக நினச்சேன்.. ஆஸியில் ஓய்வு பெற்றது ஏன்? வேதனையை பகிர்ந்த அஸ்வின்

அந்த அணியின் இளம் வீரர் விபராஜ் நிஜாம் 2 விக்கெட்டுகள் மற்றும் 38 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக போராடியும் வெற்றியைப் பெற முடியவில்லை. இருப்பினும் ஒரு ஐபிஎல் போட்டியில் மிகவும் இளம் வயதில் (20 வருடம் 275 நாட்கள்) 30+ ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் நிதிஷ் ரெட்டி 2024 சீசனில் 20 வருடம் 330 நாட்கள் வயதில் அந்த சாதனையை படைத்திருந்தார்.

The post 2 விக்கெட்ஸ் 38 ரன்ஸ்.. விப்ராஜ் ஸ்பெஷல் சாதனை போராட்டம் வீண்.. டெல்லியை மடக்கிய கொல்கத்தா வெற்றி appeared first on Cric Tamil.

Please follow and like us:

You May Also Like

More From Author