தேனி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட வட்டார மேற்பார்வையாளர்கள் வற்புறுத்துவதாக் கூறி அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வட்டார மேற்பார்வையாளர்களாக உள்ள முருகேஸ்வரி மற்றும் சுமதி ஆகியோர், அங்கன்வாடி பணியாளர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் மாதந்தோறும் அவர்கள் கட்டாய வசூல் செய்வதாகவும், பணம் தர மறுக்கும் பணியாளர்களை விரோத போக்கால் பழிவாங்குவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வட்டார மேற்பார்வையாளர்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில அளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.