பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!

பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணுவத்துக்கு பிரதமர் மோடி, முழு சுதந்திரம் வழங்கியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author