Post Views: 15

சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் AA வெளியிட்டுள்ள பதிவில், தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் – பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
Please follow and like us: