கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்  

Estimated read time 1 min read

காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாயான எடான் அலெக்சாண்டரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மே 11) ராய்ட்டர்ஸுக்கு ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்திய இந்த முன்னேற்றம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் காசாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான ஹமாஸின் முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
நியூ ஜெர்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர், ஹமாஸ் காவலில் உள்ள கடைசி அமெரிக்க பணயக்கைதியாக நம்பப்படுகிறார்.
அதிகாரப்பூர்வ விடுதலை தேதி எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், அது செவ்வாய்க்கிழமை நிகழக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடன் முக்கிய மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் எகிப்து, புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் ஒரு நேர்மறையான சமிக்ஞையாக இந்த அறிவிப்பை வரவேற்றன.

You May Also Like

More From Author