அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், “இல்லையெனில், நான் முயற்சி எடுக்கத் தயார்” எனத் தெளிவாக தெரிவித்தார்.
“தேர்தல் வெற்றிக்கு, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு மறப்போம் மன்னிப்போம் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்ற வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை அரவணைக்க வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.
பேட்டியின் போது அவர் EPS பெயரை குறிப்பிடாமல் இந்த கருத்துகளை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
EPS க்கு கெடு விதித்த செங்கோட்டையன்
