திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுவது போல், இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை காணக்கூடியது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் பாராசூட் சாகச நிகழ்ச்சி மே 16 முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி, மாநில சுற்றுலாத் துறை மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாராசூட் சாகசத்தை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கலாம்.
ஒரு பயணத்திற்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 15 முதல் 60 வயது வரை உள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.