குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!

Estimated read time 0 min read

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள 142 அடி உயர ராஜ கோபுரத்தில் தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தினத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், நடராஜர் முன்பு தேசியக்கொடி வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட தேசியக்கொடியை கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில் தீட்சிதர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினர்.

You May Also Like

More From Author