திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவித்துள்ளார்.
நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில தலைவர் சம்பத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சம்பத், திமுக அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இதை தட்டிக் கேட்காமல் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினை உயர்த்திப் பிடிப்பதாக விமர்சித்த அவர், திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், மார்ச் ஒன்றாம் தேதி பாஜக சார்பில் பட்டியல் அணி மாநில மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
