நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக் கூட்டங்களில் கிராமத்தின் வளர்ச்சி மற்றும் சுகாதாரம் சார்ந்த பல்வேறு முக்கியத் தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன:
ஊராட்சி நிர்வாக நடைமுறைகள் மற்றும் பொது நிதிச் செலவினங்கள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்படும். மேலும், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.
சடெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்றுகளைத் தடுக்க கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து ஜல் ஜீவன் இயக்கம்: வீட்டிற்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்): கிராமப்புறத் தூய்மையை மேம்படுத்துதல்.
மக்கள் திட்டமிடல் இயக்கம்: ஊரின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் திட்டமிடுதல்.
உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம்: சிறு பாசன ஏரிகளைப் புதுப்பித்தல், தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள், தொழிலாளர் வரவு-செலவுத் திட்டம் மற்றும் நலிவுற்றோருக்கான நிதி உதவி ஆகியவை குறித்தும் விளக்கப்பட உள்ளது.
மேலும் உங்கள் ஊரின் வளர்ச்சித் திட்டங்களில் உங்களின் பங்களிப்பை உறுதி செய்ய, இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். இன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
