குரு பெயர்ச்சி பொது இராசி பலன்கள் 2025

Estimated read time 1 min read

திருக்கணிதப் பஞ்சாங்கம்படி 14-05-2025 இரவு 10:32 மணிக்கு இரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சியடைகிறார்

இராசி

குரு பகவான் இராசி படி அமர்ந்த ஸ்தானம்

பொது பலன்கள்               

மேஷம்

3-முயற்சி தைரிய வீரியஸ்தானம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், தடைப்பட்ட காரியங்கள் கைகூடி வரும், தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம், இளைய சகோதரத்தினால் ஆதரவு கிடைக்கும். வீடு வண்டி வேலை தொழிலில் மாற்றம் ஏற்படலாம், கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான காலம்.

இரிஷபம்

2-தனம் குடும்பம் வாக்குஸ்தனம்

புதிய கடன்கள் கிடைக்கும்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை வம்பு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்,  பயணங்கள் இலாபம் தரலாம்,  திடீர் அதிர்ஷ்டம் / அவமானம் தொழிலில் மேன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சி் உண்டாகும்,  தொழிலில் இலாபம் ஏற்படும்.

மிதுனம்

1-இராசி

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்,  குழந்தை பாக்கியத்திற்கு சாதகமாக இருக்கும்,  திருமண சுப நிகழ்ச்சிகள் நிரைவேரலாம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் கைகூடிவரும்,  சிந்தனையில் தெளிவு கிடைக்கும்

கடகம்

12-விரையஸ்தானம்

வண்டி வாகனம் வீடு கட்டுதல் போன்ற செயல்களில் முயற்சி கைகூடும், புதிய கடன்கள் கிடைக்க சாதகமாக இருக்கும்,  ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வம்பு வழக்குகளில் கவனம் தேவை, பயணங்கள் இலாபம் தரும், திடீர் அதிர்ஷ்டம் அவமானம் ஏற்படலாம், , சுப விரையங்கள் ஏற்படலாம்.

சிம்மம்

11-இலாபஸ்தானம்

முயற்சிகள் கைகூடி வரும், இளைய சகோதரத்தினால் ஆதரவு கிடைக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்,  குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்,  திருமணம் சுப நிகழ்ச்சிகள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும், தொழிலில் நல்ல இலாபம் வரலாம்

கன்னி

10-தொழில் கர்மம்

தன இலாபம் ஏற்படலாம்,  குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், , வாக்கு நிறுவேற்றுதல், வண்டி வீடு வாகன சேர்க்கை, புதிய கடன்கள் கிடைக்கலாம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வம்பு வழக்குகளில் கவனம் தேவை தொழில் / வேலையில் கவனம் தேவை.

துலாம்

9-பாக்கியஸ்தானம்

தெளிந்த சிந்தனை இருக்கும்,  முடிவெடுப்பதில் தெளிவு கிடைக்கும், , நல்ல ஆரோக்கியம் இருக்கும், , முயற்சிகள் கைகூடும், குழந்தைகளால் ஆதரவு கிடைக்கும்,  குழந்தை பாக்கியம் நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்

விருச்சிகம்

8-அஷ்டமஸ்தானம்

சுப விரையங்கள் ஏற்படலாம், தன இலாபம் ஏற்படலாம்,  குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படலாம்,  கொடுத்த வாக்கு நிறைவேற்றுதல், வண்டி வாகன வீடு சேர்க்கை சாதகமாக இருக்கும்,  திடீர் அதிர்ஷ்டம் அவமானம் கவனம் தேவை,  பயணங்கள் ஏற்படலாம்

தனுசு

7-களத்திரம்

தொழிலில் இலாபம் ஏற்படலாம்,  நினைத்த காரியம் நிறைவேருதல் நல்ல சிந்தனை இருக்கும்,  முடிவெடுப்பதில் தெளிவு கிடைக்கும்,  நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும்,  முயற்சிகள் கைகூடும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், திருமண முயற்சி வெற்றிகரமாக முடியும்.

மகரம்

6-கடன் நோய் வேலை

தொழிலில் மேன்மை ஏற்படலாம்,  புதிய தொழில் தொடங்குதல், சுப விரையங்கள் ஏற்படலாம் தன இலாபம் குடும்பத்தில் மகிழ்ச்சி திருமண சுப நிகழ்ச்சி நிகழலாம் புதிய கடன்கள் கிடைக்கும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வம்பு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

5-பூர்வீகம் புத்ரம்

நீண்ட நாள் தடைபட்ட காரியம் நிரைவேருதல், எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும் தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம், , தெளிந்த சிந்தனை நல்ல ஆரோக்கியம் முடிவு எடுப்பதில் நல்ல தெளிவு கிடைக்கும்,  குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்

மீனம்

4-சுகஸ்தானம்

பயணங்கள் இலாபம் தரும்,  திடீர் அதிர்ஷ்டம் அவமானம் ஏற்படலாம் கவனம் தேவை , தொழிலில் மேன்மை ஏற்படலாம்,  புதிய தொழில்  கிளைகள் தொடங்க நல்ல நேரம் சுப விரையங்கள் ஏற்படலாம், வண்டி வாகனம் வீடு சேர்க்கைக்கு சாதகமான நேரம்., தொழில் / வேலையில் கவனம் தேவை.

 

குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் பொதுவான இராசியை மையமாக கொண்டு சொல்லப்பட்ட பலன்களே., தனிப்பட்ட நபரின் ஜாதக அமைப்பு மற்றும் தசா புத்திகளின் அமைப்பிற்கு ஏற்ப  பலன்கள் மாறுபடலாம்.


ஜோதிடமணி தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்thennettisriram@gmail.com
9944443215

Please follow and like us:

You May Also Like

More From Author