அமெரிக்காவில் அதிகளவில் பரவும் NB.1.8.1 கொரோனா மாறுபாடு  

Estimated read time 1 min read

அமெரிக்காவிற்கு வரும் பல சர்வதேச பயணிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், NB.1.8.1 என்ற புதிய கொரோனா மாறுபாடு உலக சுகாதார நிறுவன அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய (CDC) தகவலின்படி, ஏப்ரல் 22 முதல் மே 12 வரை கலிபோர்னியா, வாஷிங்டன், வர்ஜீனியா மற்றும் நியூயார்க்கில் உள்ள விமான நிலையங்களில் இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மாறுபாடு பொதுவாக சமீபத்தில் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்தவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.
JN.1 மாறுபாடு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மாறுபாடு, தற்போது சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.

You May Also Like

More From Author