சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

Estimated read time 1 min read

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கௌதமன் தாக்கல் செய்துள்ள மனுவில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 680 கோடி ரூபாய் அரசு நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும்,

இதுவரை 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், போதிய தொழில்நுட்பப் புள்ளிவிவரங்கள், நிபுணர் குழு அறிக்கைகள், பொருளாதார ஆய்வுகள் இல்லாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author