சீன வணிக அமைச்சர் வாங் வென்தாவ், மாலத் தீவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக அமைச்சர் சாய்த் உடன் டிசம்பர் 30ஆம் நாள் காணொளி வழியாகச் சந்திப்பு நடத்தினார்.
சீன-மாலத்தீவு இடையே தாராள வர்த்தக உடன்படிக்கை 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்படும் என்று இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.
இந்த உடன்படிக்கை அமலாக்கப்பட்ட பின், மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்கின்ற சீனாவின் கப்பல்கள், மின்சார வசதிகள், வீட்டு சாமான்கள் உள்ளிட்ட தொழிற்துறை பொருட்களும், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களும் சலுகையைப் பெறும்.
அதேவேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்ற மாலத்தீவின் நீர் வாழ்வினங்கள் உள்ளிட்டவை, சுங்க வரி இல்லாத சலுகையைப் பெறும். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்கத்துக்கு இந்த உடன்படிக்கை உத்தரவாதத்தை வழங்கும்.