4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்கள தமிழ்நாட்டில் பானவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.05.2023 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி. தீலகிரி மாவட்டம் குன்னூர். திண்டுக்கள் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர் விழுப்புளம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதிர் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் நூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு களை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொட்ர்ந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது நமது கிராமப்புற இக்கல்வியாண்டில் பயன்பெறும் வகையில் மேலும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக உயர்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம் கேளிகுப்பம். திருச்சி பாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுத்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தொடங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளர்கள். இதனால் இப்பகுதியிலுள்ள 1,120 மாணவர்கள் உயர்கள் பெறுவார்கள்.

You May Also Like

More From Author