சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திப் பணியகத்தின் தலைவரும் சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளருமான மூத்த கர்னல் வு சியான் சமீபத்திய இராணுவ பிரச்சினை குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.
அதில் வு சியான் கூறுகையில், அமெரிக்காவின் ஆதரவுடன், தென் சீனக் கடலின் பல இடங்களில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து சிக்கல்களைத் தூண்டி வருகிறது.
ரென் அய் ஜியாவோ, சியான்பின் ஜியாவோ, ஹுயோ தெங் ஜியாவோ, ஹூவாங்யன் தீவு ஆகிய பகுதிகள் உள்ளிட்ட தென் சீனக் கடல் பகுதியில் அமைதி மற்றும் நிதானத்தை அழிப்பது யார், பொய்யைப் பரப்புவது யார் என்பதைச் சர்வதேச சமூகம் தெளிவாகப் பார்த்து வருகிறது என்றார்.
இப்பிரச்சினையில் சீனாவின் மனப்பான்மை தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிலிப்பைன்ஸ் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், சீனா உறுதியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் தனது தவறைத் தொடர்ந்தால், சீனா உறுதியாக அதற்குத் தக்க பதிலடி வழங்கும் எனவும் அவர் எச்சரித்தார்.