பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்..! இனி கால்குலேட்டர் பயன்படுத்தலாம்..!

Estimated read time 1 min read

தமிழகத்தில் பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, பொதுத்தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்களும் சாதாரண கால்குலேட்டர்கரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி தேர்வுகள் சொல்வதை எழுதுபவர்களாக இலம்தேடி கல்வி தன்னார்வலர்கள், ஆசிரியர் பட்டய படிப்பு மாணவர்கள், பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு ஐந்து விதமான வினாத்தாள்கள் வழங்கப்படும். (வினாக்களின் வரிசை மாற்றப்பட்டிருக்கும்). இயற்பியல் வேதியல், கணிதம், வணிக கணிதம், புள்ளியியல் பாடங்களுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த ஆண்டு லாகரதம் புத்தகம் (Logarithmic Books) A4 அளவில் பெரிய எழுத்துக்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பில் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதாரண கால்குலேட்டர்கரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்ப்டடுள்ளது. மாணவர்கள் அதற்கான கால்குலேட்டரை எடுத்து வரலாம். மீதம் இருக்கும் வினாத்தாள்களை தேர்வு அறையிலேயே மாணவர்கள் முன்னிலையில் சீல் செய்ய நடைமுறை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் வினாத்தாள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தனித்தேர்வர்களின் இருப்பிட முகவரியை உறுதி செய்யும் வகையில், மாவட்டங்களில் விண்ணப்பிக்கும் வகையில், ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால், மாணவர்கள் சொந்த ஊரிலேயே தேர்வு எழுதலாம்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 பேரும் என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 8,82,806 மற்றும் தனித்தேர்வர்கள் 26,196 என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 395 சிறைவாசிகளும் தேர்வெழுதவுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு 3,412 தேர்வு மையங்களிலும், 11ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 2,615 தேர்வு மையங்களிலும் மற்றும் பத்தாம் வகுப்பிற்கு 4,219 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 17,61,528 தேர்வர்கள் 2026ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்ப்டடுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author