அணு ஆயுத ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பிய அமெரிக்கா!

Estimated read time 0 min read

அமெரிக்க அரசு நிர்வாகம் அணு ஆயுத ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஈரான் அணு ஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது, அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும்.

பிறகு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதன் பிறகு அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

இருப்பினும், ஈரான் தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலிலேயே அணுஆயுத ஒப்பந்த முன்மொழிவை அனுப்பியுள்ள அமெரிக்கா, ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது ஈரானுக்கு மிகவும் நல்லதென மிரட்டியுள்ளது.

You May Also Like

More From Author