பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
ஒருவரையொருவர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டாக் தாலிபான் ஆளுநர், இந்தச் சண்டையில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தரப்பில், சாமன் எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவமனை, இந்த மோதலின்போது லேசான காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள், ஆப்கானியப் படைகள் பதானி பகுதியில் மோட்டார் குண்டுகளை வீசியதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
