வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Estimated read time 1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்..

முருகன் பிறந்த விசாக நட்சத்திரத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கோவில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.நள்ளிரவு 1-00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வரும் பக்தர்கள் அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்..

கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் கோவில் நகரமே திருவிழா போல் காட்சியளிக்கிறது.

You May Also Like

More From Author