இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்  

Estimated read time 1 min read

நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது.
இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் மத்தியில் நீரிழிவு நோய் (Early-onset Diabetes) அதிவேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நடத்திய இரண்டு ஆண்டு தேசிய அளவிலான ஆய்வின்படி, 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர்.
அதாவது, கிட்டத்தட்ட ஐந்து இளைஞர்களில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. மேலும், சுமார் கால் பகுதியினர் (25%) நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையில் (Prediabetic) உள்ளனர்.
தென், மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இதன் தாக்கம் 43% ஆக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author