திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Estimated read time 0 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலையில், கீழ் திருப்பதியில் இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 முதல் 8 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆனால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author