பல நாடுகளின் ஊடகத் துறையினர்கள் சின்ஜியாங்கில் பயணம்

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஏற்பாடு செய்த “பட்டுப்பாதை பொருளாதார மண்டல நாடுகளின் ஊடகத் தலைவர்களுக்கான கருத்தரங்கு”அண்மையில் சின்ஜியாங்கில் நடைபெற்றது. ஜெர்மனி, ரஷியா, ஹங்கேரி, ஸ்பெயின், கசகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஊடகத் துறையினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அவர்கள் கூறுகையில், சின்ஜியாங்கின் பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியடைந்து வருவதோடு, சமூகம் இணக்கமாகவும், நிதானமாகவும் இருக்கிறது. மேலும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, உயிரினச் சுற்றுச்சூழல் பெரிதும் பாதுக்காப்பட்டு வருகிறது என்று கூறினர்.

ஜெர்மனியின் ஹாம்பர்கர் அபென்ட்ப்ளாட் நாளேட்டின் செய்தியாளர் அனிகா வூல்ட்ஸ் கூறுகையில், சின்ஜியாங்கின் தியான்ஷான் ஷெங்லீ சுரங்கப் பாதை, மக்களின் பயணத்துக்கு வசதியளிக்கிறது. இதன் மூலம், உள்ளூர் வளர்ச்சி, புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளது என்றார்.

மேலும், லக்சம்பர்க் குரோனிக் இணைய செய்தித்தாளின் தலைமைப் பதிப்பாசிரியர் ஜெஃப்ரி வில்லியம் தாம்சன் கூறுகையில், சின்ஜியாங்கின் பொதுச் சேவைகளை நான் அறிந்து கொண்டேன். உள்ளூர் மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகள் மக்களுக்கு வசதியளிக்கின்றது. அத்துடன் காப்பீட்டில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author