சூரிய காந்த புயலால் ஸ்டார்லிங்கின் 500க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயலிழப்பு  

Estimated read time 1 min read

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் அதன் லட்சிய ஸ்டார்லிங்க் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
2020 மற்றும் 2024 க்கு இடையில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் 500 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அந்நிறுவனம் இழந்துள்ளதுதான் இதற்கு காரணமாகும்.
சமீபத்திய அறிவியல் பகுப்பாய்வு இந்த இழப்புகளை சூரிய சுழற்சி 25 இன் போது அதிகரித்த சூரிய செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது, இது செயற்கைக்கோள் செயல்பாடுகளை பாதிக்கும் தீவிர புவி காந்த புயல்களைத் தூண்டியுள்ளது.
உலகளாவிய பிராட்பேண்ட் கவரேஜை வழங்க வடிவமைக்கப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க், வாராந்திர ஏவுதல்கள் மூலம் வேகமாக வளர்ந்துள்ளது.
இருப்பினும், தற்போது சூரியனின் 11 ஆண்டு சுழற்சியில் உச்ச காலம் நிலவுவதால் கொரோனல் நிறை வெளியேற்றங்களை (CMEs) தீவிரப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author