செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிபுணர் டேவிட் டால்ரிம்பிள் எச்சரித்துள்ளார்.
டேவிட் டால்ரிம்பிள் தனது சமீபத்திய பேட்டியில், ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் அவர்களை விடச் சிறப்பாகச் செய்யும் நிலையை எட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நமது நாகரிகம், சமூகம் மற்றும் கோளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாம் எந்தத் துறைகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ, அந்தத் துறைகளில் ஏஐ நம்மைக் காட்டிலும் முன்னேறிவிடும்.” என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்?
