வார இராசிப்பலன் ( 15-06–2025 முதல் 21-06-2025 வரை)

Estimated read time 1 min read

மேஷம் :

இராசிநாதன் செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிப்பதால் எந்த காரியத்தையும் தைரியமாகவும் திடமான மனநிலையுடன் செய்வீர்கள்

குழந்தைகளால் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படலாம்.

இராசியில் சுக்ரன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மேன்மையும் சிந்தனை செயலிலும்  கலைநயத்தோடு ஈடுபடுவீர்கள்.

இராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள குரு அஸ்தங்கம் ஆவதால் புதிய முயற்சிகள் தாமதப்படலாம், நண்பர்கள் இளைய சகோதர சகோதிரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படலாம், வார இறுதியில் பண வரவும், அதற்கு தகுந்த செலவுகளும் ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள், 15,16,17, 18,21.

ரிஷபம் :

இராசிநாதன் சுக்ரன் இராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்களால் தன இலாபம் ஏற்படலாம், பயணங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும்.

ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் இலாபம் சற்று குறைவுடன் காணப்படலாம்

குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது. தன வரவு சற்று குறைபடலாம். புதிய முயற்சிகள் சற்று தாமதப்படலாம். தாய்வழி ஆதரவு நன்றாக இருக்கும்.

புதிய்கடன்கள் வாங்குவதில் தடைகள் ஏற்படலாம். அனுகூலமான நாட்கள் – 17,18,19,20

 

மிதுனம் :

இராசி நாதன் புதன் ஆட்சி பெற்று சூரியனுடன் இணைவதால் அரசு சம்பந்தபட்ட விஷயங்கள் சாதகமாக நடைபெரும். தந்தை வழி்ஆதரவு கிடைக்கும்.

புதிய நிலம் வண்டி வீடு வாங்குவதில் ஆர்வம் ஏற்பட்டு முயற்சிகள் மேற்கோள்வீர்கள்.

கணவர் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமண முயற்சிகள் தாமதப்படலாம். கூட்டுத்தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

தொழில் சற்று மந்தமாக காணப்படலாம்.

வார ஆரம்பத்தில் சந்திரன் 8ல் சஞ்சரிப்பதால் மன சஞ்சலங்கள் முயற்சிகளில தடை மற்றும் அலைச்சல் ஏற்படலாம். புதிய விஷயங்களில் கவனம் தேவை. வார இறுதியில் மேற்கொள்றும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.

அனுகூலமான நாட்கள் 19,20,21

 

 

கடகம் :

இராசி நாதன் சந்திரன் வார மத்தியில் 8ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியான அலைச்சல் மன சஞ்சலங்கள் முடிவு எடுப்பதில் தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வார தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

தொழிலில் நல்ல இலாபம் ஏற்படும். உத்திநோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு மற்றும் வேலை பலு சற்று அதிகமாக காணப்படலாம்.

வார இறுதியில் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

அனுகூலமான நாட்கள் 15,16, 21

சிம்மம் :

இராசிநாதன் சூரியன் 11ல் புதனுடன் இணைவது தன வரவு நன்றாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கொடுத்த வாக்கு நிறைவேற்றுவீர்கள்.

தன்னம்பிக்கை மிகுந்து காணப்படுவீர்கள்.

நீண்ட நாட்கள் தொழில் ரீதியான முயற்சிகள் நிறைவேற சாதகமான வாரம். கலை எழுத்து துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் வாரமாக அமையும்.

தொழில் ரீதியான கடன்கள் தீர்க்க எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும், ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும் நல்ல அமைப்பு..

மூத்த சகோதரங்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

வார இறுதியில் சந்திரன் 8ல் இருப்பதால் தாயாரிடம்  கருத்து வேறுபாடு ஏற்படலாம், அதனால் மன சஞ்சலங்கள் ஏற்படலாம், பயணங்களால் சோர்வு ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் 15,16,17,18

கன்னி :

இரசி நாதன் புதன் மிதுனத்தில் ஆட்சியாக இருப்பதால் தொழில் ரீதியான இலாபங்கள் மேன்மையாக இருக்கும். எண்ணங்களில் தெளிவு, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நல்ல வாரமாக அமையும்.

தந்தை மற்றும் குடும்பத்தில் ஒரு சிலரால் மன சஞ்சலங்கள் அவமானங்கள் ஏற்படலாம், வெளியூர் வெளிநாடு வெளிமாநில பயணங்கள் சாதகமாக இலாபகரமாக அமையும்.

தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கணவர் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது, கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. வாரத்தின் பிற்பகுதி நல்லபடியாக இருக்கும்.

குழந்தைகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தடைபடலாம் அதனால் மன சஞ்சலங்கள் ஏற்படலாம்.

தொழில் ரீதியான கடன்கள் தீர்க்கும் முயற்சி வெற்றிகரமாக இருக்கும், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், வழக்குகள் சாதகமாக முடியும் அமைப்பில் நல்ல வாரமாக அமையும்.

அனுகூலமான நாட்கள் 17,18,19,20

துலாம் :

இராசி நாதன் சுக்ரன் இராசியை பார்ப்பதால் நல்ல மன தைரியத்துடனும் தெளிந்த சிந்தனைகளுடனும் செயலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.  எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும் நல்ல வாரமாக அமையும்.

தந்தை வழி ஆதரவு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் இலாபகரமாக அமையும்.

கணவர் மனைவி உறவு மேன்மையாக இருக்கும்., தன வரவு நன்றாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். கூட்டுத்தொழிலில் மேன்மை ஏற்பட்டு இலாபம் மேம்படும்.

புதிய கடன்கள் எடுப்பதில் முயற்சிகள் தாமதப்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தந்தை இளைய சகோதரங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாரத்தின் முற்பகுதியில் தொழிலில் விரையங்கள் நஷ்டங்கள் ஏற்பட்டு மன சஞ்சலங்கள் ஏற்படலாம்.

வாரத்தின் பிற்பகுதி ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் உத்தியோகத்தில் மேன்மையும் ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் 19,20,21

 

விருச்சிகம் :

இராசிநாதன் செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகமாகவும் தைரியத்துடனும் நல்ல தெளிந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம சீராக இருக்கும்.

குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தன வரவு சற்று குறைவாக காணப்படும், முயற்சிகள் சற்று தாமதப்படலாம். வாக்கில் கவனம் தேவை.

திருமண முயற்சிகள் சாதகமாக நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டங்கள் அதன் மூலம் பண வரவு ஏற்படலாம், தொழிலில் நல்ல இலாபம் ஏற்படலாம். தொழிலில் பணிபுரிபவர்களால் அவமானம் ஏற்படலாம்.

வார ஆரம்பத்தில் பெண்களால் ஆதரவு மற்றும் இலாபம் ஏற்படலாம்.

வாரத்தின் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு அதனால் மன சஞ்சலங்கள் ஏற்படலாம்.

மூத்த சகோதரங்களால் நண்பர்களால் மன சஞ்சலங்கள் பண நஷ்டம் ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் 1(,16,21.

தனுசு :

இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் அஸ்தங்கமாவதால் குடும்பத்தில் கணவர் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது.

கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

நண்பர்களுடன் கவனமாக இருக்கவும்.

திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வண்டி வீடு போன்றவற்றால் செலவுகள் ஏற்படலாம்.

முயற்சிகள் தாமதம் அல்லது தடை படலாம். இளைய சகோதரங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அவர்கள் வண்டியில் செல்லும் போது கவனம் தேவை.

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் வாரம்.

அனுகூலமான நாட்கள் – 17,18

 

மகரம் :

இராசிக்கு 12 மற்றும் 3 ம் அதிபதி குரு அஸ்தங்கம் ஆவதால் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம், தூக்கம் கெடலாம்.

நேரத்திற்கு உணவு அருநரத முடியாமல் போகலாம்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இலாபம், உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.

தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும்.

புதிய வண்டி வீடு நிலம் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அவற்றில் முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் கை கூடும் நேரம்.

உடல் நலத்தில் கவனம் தேவை. வாரத்தின் முற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும்.

வார இறுதியில் தன வரவு மேம்படும்.

அனுகூலமான நாட்கள் – 19,20.

 

கும்பம் :

இராசிக்கு தனாதிபதி மற்றும் இலாபாதிபதி குரு அஸ்தங்கம் ஆவதால் தன வரவு குறைந்து காணப்படும்.

தொழிலில் இலாபம் குறைந்து காணப்படலாம்.

மூத்த சகோதரங்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்

எந்த காரியத்திலும் இந்த வாரம் அவசரமாக செயல் படுவீர்கள், நிதானம் தேவை. .

குடும்பத்தில் கணவர் மனைவி விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது.

பேச்சில் கவனம் நிதானம் தேவை, தேவையற்ற வார்த்தைகளை குறைத்துக் கொள்ளவும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வண்டி வீடு சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம்.  வார ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும்.

உத்தியோகத்தில் வேலை பலு கூட வாய்ப்புக்கள் உள்ளது, மன அழுத்தம் ஏற்படலாம்.

அனுகூலமான நாட்கள் – 21

 

மீனம் :

இராசிநாதன் மற்றும் 10 ம் அதிபதி குரு அஸ்தங்கம் ஆவதால் மன அமைதியற்று சிந்தனை தெளிவற்று காணப்படலாம்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

முயற்சிகள் தடை தாமத படலாம் ஆகையால் கவனத்தோடு செயல்படுங்கள்.

இராசியில் சனி சஞ்சரிப்பதால் மன அழுத்தம் வேதனை ஏற்படலாம்.

தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதி செவ்வாய் சிம்மத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்ட விஷயங்கள் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன.

தந்தையினால் ஆதரவு ஏற்படலாம். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்க நேரிடலாம். ஆலய பணியில் ஈடுபடுவீர்கள்.

வார முதலில் தன வரவு நன்றாக இருக்கும். வார பிற்பகுதியில் செலவுகள் அதிகமாக இருக்கலாம்.

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்லவும்.

அனுபூலமான நாட்கள் : 15,16

 

சுபம் !!!

 

தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்

9566620842 / 9944443215

astromanibharathy@gmail.com

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author