சோலார் அமைப்பவர்களுக்கு டபுள் தமாகா! ரூ.1 லட்சம் மானியம் + அனைத்து கட்டணங்களும் ரத்து!

Estimated read time 0 min read

தமிழகம் உட்பட நாடு முழுதும் வீடுகளில் மின் கட் டண செலவைக் குறைக்க, பிரதமர் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இதனுடன் சேர்த்து, கூடுதல் மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு கடந்த மாதம் தொடங்கியது. இதன் வாயிலாக, 3 கிலோ வாட் மின் நிலையம் அமைத்தால், 1 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் வரும் மார்ச்சுக்குள், 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இத்திட்டத்தை மேலும் ஊக்குவிக்கவும், நுகர்வோரின் செலவைக் குறைக்கவும், சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கு, பல்வேறு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, விண்ணப்ப கட்டணம், இரு வழி மீட்டர் செலவு, மின் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.

மேலும், ஏற்கனவே உள்ள ஒருமுனை மின் இணைப்பை, மும்முனை இணைப்பாக மாற்றும் கட்டணம், மின் சுமை அல்லது மின் தேவையை, 10 கிலோ வாட் வரை உயர்த்துவதற்கான கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட உள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததும், இந்த கட்டண விலக்கை உடனே செயல்படுத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author