ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை (ஜூலை 30) அதிகாலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஹவாய் மற்றும் பல பசிபிக் பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளன.
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி 03:17 மணிக்கு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம், உலகளவில் பதிவான பத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வந்ததை உறுதிப்படுத்தியது.
அமெரிக்காவை தாக்கியது சுனாமி; 10 அடி வரை அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை
