நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் – மத்திய அரசு திட்டம்!

Estimated read time 1 min read

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான வரைவு மசோதா கடந்த ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட நிலையில், மக்களின் கருத்துக்காக அதன் நகல் வெளியிடப்பட்டது.

தற்போதுள்ள விதைகள் சட்டம் கடைசியாக 1972-ல் திருத்தப்பட்டது. விவசாயிகளுக்கு மலிவு விலையில் உயர்தர விதைகள் கிடைப்பதை புதிய மசோதா உறுதி செய்கிறது. மசோதாவுக்கு ஆட்சேபனை எழுந்தால், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author