சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு விரைவில் நடைபெறவுள்ளது. சர்வதேச துறையினர்கள் இதில் வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றனர். சர்வதேச நிலைமை மாறி வரும் பின்னணியில், சீனப் பொருளாதாரம் மாபெரும் உறுதி தன்மையுடன் உள்ளது. உயர் தர வளர்ச்சி அதிகமான சாதனைகளைப் பெற்று, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து ஆற்றல் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், சீனா அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. உலகச் சந்தையுடன் நெருக்கமாக தொடர்பு மேற்கொள்வதோடு, சீனாவின் உள்நாட்டுச் சந்தையின் தேவையை சீனா தீவிரமாக்கியுள்ளது. சீன அரசின் சரியான கொள்கைகளின் மூலம், சீனா நிதானமாக வளர்ந்து வருகின்றது என்று ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் சர்வதேச விவகாரக் கமிட்டியின் முதன்மை துணை தலைவர் டிமிட்ரி ஜார்ஜீவிச் நோவிகோவ் தெரிவித்தார்.
