மதுரையில் TVK இரண்டாவது மாநில மாநாடு இன்று: களைகட்டிய பாரபத்தி  

Estimated read time 0 min read

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முதல்நிகழ்வாக கட்சி தலைவர் விஜய் மேடையருகே அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றி, பின்னர் தொண்டர்களிடையே உரையாடுவார்.
மாநாட்டில் பங்கேற்க விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து காரில் மதுரை வந்து, மாநாட்டு திடலுக்கு அருகிலுள்ள ஓட்டலில் தங்கினார்.
அதற்கு முன், அவரது பெற்றோர் ஷோபா மற்றும் சந்திரசேகர் மதுரை வந்தடைந்தனர். அவர்கள் நேற்று மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டனர்.
மாநாட்டில் பங்கேற்க கட்சியின் தொண்டர்களும், விஜயின் ரசிகர்களும் நேற்று இரவே மாநாடு நடைபெறவுள்ள மைதானத்திற்கு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author