இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இதில், பிசிசிஐ தலைவர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சேர்மன் பதவிக்கான தேர்தல்கள் முக்கிய அஜெண்டாவாக உள்ளன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் பதவி காலியாக உள்ளது.
அதேபோல, ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தனது ஆறு வருட பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளதால், ஓய்வு பெற உள்ளார்.
பிசிசிஐயின் மாநில சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின்படி, இந்த முக்கியப் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதேசமயம், மற்ற முக்கியப் பதவிகளில் தற்போதைய நிர்வாகிகள் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 28 இல் பிசிசிஐ வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
