இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிவிதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தால், இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஒரே நாளில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 81,074 இல் முடிந்தது, அதேசமயம் நிஃப்டி 24,600 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து, கரடிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்குள் (bearish territory) நுழைந்தது.
முன்னதாக, இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரியை விதித்தது.
இதன் மூலம், மொத்த வரிச்சுமை 50% ஆக உயர்ந்தது.
அமலுக்கு வந்த அமெரிக்க வரிவிதிப்பு; இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்
