மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, e-KYC ஒருங்கிணைப்பை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், கிராமப்புற குடும்பங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் கிராமப்புற மேம்பாட்டை உறுதி செய்கிறது.
நாடு முழுவதும் 2.69 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ள இந்தத் திட்டத்தில் 26 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி
