ஒசாமா பின்லேடனை மறந்துவிட்டீர்களா? அமெரிக்காவை நோஸ் கட் செய்த சசி தரூர்  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அளித்த மதிய விருந்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக விளாசியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் கடந்த காலத்தை, குறிப்பாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததில் அதன் பங்கை அமெரிக்கர்கள் மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு அருகில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்ததை சசி தரூர் நினைவு கூர்ந்தார்.
9/11 தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவரை பாகிஸ்தான் பாதுகாப்பாக மறைந்து வைத்ததை அமெரிக்கா எப்படி இவ்வளவு விரைவாக மறந்துவிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

You May Also Like

More From Author