#JUST IN : மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!

Estimated read time 0 min read

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 1, 2025) தொடங்கிய நிலையில், முதல் நாளிலும் இன்றும் (டிசம்பர் 2, 2025) எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகளால் கடும் அமளி ஏற்பட்டது.

மத்திய அரசு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம், டெல்லி கார் வெடிப்பு, வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு, டெல்லி காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கோஷமிட்டன. நேற்று அவை நடவடிக்கைகள் முடங்கிய நிலையில், இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும், அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி வரி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதே மசோதா இன்று காலை மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author