யூனியன் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ரூ.10,710 கோடியை எடுத்துள்ளனர்.
இந்த வருட பட்ஜெட்டில், டெரிவேட்டிவ் வர்த்தகங்கள் மற்றும் பங்கு முதலீடுகளின் மூலதன ஆதாயங்கள் மீதான வரிகளை அரசாங்கம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ரூ.10,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை இந்திய பங்குச்சந்தைகள் இழந்துள்ளன.
பங்குச் சந்தை தரவுகளின்படி, FPIகள் ஜூலை 23 அன்று ரூ.2,975 கோடி மதிப்புள்ள பங்குகளையும், ஜூலை 24 அன்று ரூ.5,130 கோடி மதிப்புள்ள பங்குகளையும், ஜூலை 25-ம் தேதி ரூ.2,605 கோடி மதிப்புள்ள பங்குகளையும் விற்றுள்ளன.