சீனச் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் ஆகஸ்ட் 7ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்ந்து சீராக வளர்ந்து, அதன் மொத்த தொகை 30.13 இலட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவற்றில், ஏற்றுமதித் தொகை 17.44 இலட்சம் கோடி யுவானை எட்டி, 14 விழுக்காடு அதிகரித்துள்ளதோடு, இறக்குமதித் தொகை 12.69 இலட்சம் கோடி யுவானை எட்டி, 22 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஜுலை மாதத்தில் மட்டும், தொழிற்துறை இயந்திர மனிதர்கள், முப்பரிமாண அச்சுப்பொறி உள்ளிட்ட உயர் தொழில் நுட்பப் பொருட்களின் ஏற்றுமதித் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 50 விழுக்காடு அதிகரித்து, அந்த மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்புத் தொகையில் 60 விழுக்காடு வகிக்கிறது.

You May Also Like

More From Author