இலங்கையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

Estimated read time 0 min read

இலங்கையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அந்நாட்டு கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையின் கல்பிட்டி கடல் பகுதியில் அந்நாட்டு கடலோர கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த படகை சோதனை செய்தனர். அதில், 3 மூட்டைகளில் போதைப்பொருள்கள் கடத்தி வந்தது தெரிவந்தது. இதனை தொடர்ந்து, படகில் வந்த 3 பேரையும் கைது செய்த கடலோர காவல்படையினர், 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலிருந்து கள்ளப்படகு மூலம் கடத்திவரப்பட்டிருக்கலாம் என்றும், படகில் எடுத்து சென்று சர்வதேச கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க முயன்றிருக்கலாம் எனவும் கடலோர காவல்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழக கடலோர கிராமங்களில் மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

You May Also Like

More From Author