அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சியும் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக டிரம்ப், ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல் மற்றும் ஆட்டோமொபைல்களில் பயன்படுத்தப்படும் அரிய மண் விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதை இரு நாடுகளும் நோக்கமாக கொண்டுள்ளன.
அமெரிக்க பிரதமர் டிரம்ப், ஜப்பானின் தகைச்சி ஆகியோர் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
